Switch to
   
   
   
செய்தி
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM GMT +05:30 ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான....

....எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப்புலி உறுப்பினர் ஆகிய இருவரைத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதிவான் சம்பா ஜானகி ராஜரட்ண நேற்று முன்நாள் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன எனவும், ஏவுகணைக் கூடு ஒன்று விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது இரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டுவறந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு எம். இராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு ஹெலிகொப்டரை அழித்ததார் எனக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப்புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதிவான் எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement